பிசியான நடிகர்
நடிகர் சூர்யா “கங்குவா” திரைப்படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ஒரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இத்திரைப்படங்களை தொடர்ந்து வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்திலும் நடிக்க உள்ளார். இவ்வாறு தமிழ் சினிமாவின் பிசியான நடிகராக வலம் வருகிறார்.

காக்க காக்க
கௌதம் மேனன் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு சூர்யா, ஜோதிகா உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “காக்க காக்க”. இத்திரைப்படத்தில் சூர்யா அன்புச்செல்வன் ஐபிஎஸ் என்ற கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருப்பார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு ஊடகத்தில் பேட்டியளித்த சூர்யா, “2002-2005 Batch-ல் இருந்த ஐபிஎஸ் அதிகாரிகள் பலரும் காக்க காக்க திரைப்படத்தை பார்த்திருக்கின்றனர். அந்த படத்தை பார்த்துவிட்டு ஐபிஎஸ் படித்திருக்கிறார்கள். அந்த படத்தை பார்த்த பலர் அந்த சமயத்தில் தான் பார்த்துக்கொண்டிருந்த வேலைகளை ராஜினாமா செய்துவிட்டு ஐபிஎஸ்க்கு படித்தார்கள். நல்ல திரைப்படங்கள் உங்களை நிச்சயம் சிறந்த மனிதராக மாற்றும்” என்று கூறியிருந்தார்.