வெர்சட்டைல் வில்லன்
எஸ்.ஜே.சூர்யா சமீப காலமாக பல திரைப்படங்களில் வித விதமான வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். “மார்க் ஆண்டனி”, “இந்தியன் 2”, “கேம் சேஞ்சர்” போன்ற பல திரைப்படங்களை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம். தற்போது “LIK”, “வீர தீர சூரன்” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சீன வில்லன்…
இந்த நிலையில் “சர்தார் 2” திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா சீனராக நடித்து வருகிறாராம். கார்த்தி நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவான “சர்தார்” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருந்த நிலையில் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தில் சீனரை போன்ற தோற்றத்தில் நடித்து வருகிறாராம் எஸ்.ஜே.சூர்யா.