ஒழுக்கமான நடிகர்
தமிழ் சினிமாவின் சிறந்த நடிகராக மட்டுமல்லாது ஒழுக்கமான நடிகராகவும் வலம் வந்தவர் சிவகுமார். அது மட்டுமல்லாது கம்பராமாயணம், மகாபாரதம், சங்க இலக்கியங்கள் போன்றவற்றில் அதிக ஈடுபாடு உடையவர். பல இலக்கியங்களை மனப்பாடமாக மனதிற்குள் ஏற்றிவைத்து இடைவிடாமல் பேசக்கூடிய ஞாபக சக்தி கொண்டவர் இவர்.

தொலைச்சுப்புடுவேன்….
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட நடிகர் மணிகண்டன் சிவகுமாரை குறித்து பல விஷயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார். “சிவகுமார் சார் எனக்கு ஒரு நண்பரை போல. அடிக்கடி என்னை தொடர்புகொண்டு பேசுவார். அவர் நிறைய புத்தகங்களை எனக்கு படிக்க கொடுப்பார். இது படிச்சியா? அது படிச்சியா? என்று கேட்டுக்கொண்டே இருப்பார். சமீபத்தில் ஒரு நாள் அவரை பார்த்தபோது ‘டீ காப்பி நிறையா குடிக்கிறியாமே? டீ காபி உன் நாக்குல பட்டது தொலைச்சிப்புடுவேன்டா” என்றார் என மிகவும் உற்சாகமாக பகிர்ந்துகொண்டார்.