ஓவியர் சிவகுமார்
நடிகர் சிவகுமாரை நமக்கு ஒரு மிகச் சிறந்த நடிகராகவும் ஒழுக்க சீலராகவும் மட்டுமே தெரிந்திருக்கும். ஆனால் அவர் ஒரு மிகச் சிறந்த ஓவியரும் கூட. மிகவும் கலை நயத்துடனும் மிகவும் தத்ரூபமாகவும் வரையக்கூடிய திறன் படைத்தவர் சிவகுமார். இதுவரையில் பல சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களின் உருவத்தை ஓவியங்களாக வரைந்துள்ளார் சிவகுமார். இவரது ஓவியம் வரையும் திறமையை பாராட்டாத நடிகர்களே இல்லை என்றும் கூறலாம்.

ஆதங்கத்தில் பொங்கிய சிவகுமார்
இந்த நிலையில் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற அஞ்சல் தலை ஓவியக் கண்காட்சியில் பேசிய சிவகுமார், “அடுத்த ஜென்மத்தில் நான் ஓவியனாகவே பிறக்க விரும்புகிறேன். ஆனால் இந்தியாவில் மட்டும் பிறக்க கூடாது” என கூறினார். சிவகுமாரின் இந்த பேச்சு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சிவகுமாரின் இந்த கருத்து குறித்து பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில் பேசியபோது, “சிவகுமார் தனது இதயத்தில் இருந்த வலியைத்தான் அவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார். ஒரு ஓவியனாக மிகப்பெரிய அளவில் பொருள் ஈட்டமுடியாத சூழ்நிலை இந்தியாவில் இருக்கிறது. அதைத்தான் சிவகுமார் பேசியுள்ளார்” என்று தெளிவுப்படுத்தியுள்ளார்.