நடிகர் சிவகார்த்திகேயன்:
தமிழ் சினிமாவின் பிரபலமான ஹீரோவாக இருந்து வரும் சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்தில் நடித்து மாபெரும் வெற்றியை கொடுத்திருக்கிறார். இது அவரது சினிமா கெரியரில் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்பட்டு வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் ஆர்த்தி என்ற தனது தாய் மாமாவின் மகளை திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு ஆராதனா என்றொரு மகளும் இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் மகன் குகன் தாசுக்கு இருக்கும் வினோதமான ஒரு பழக்கம் குறித்து தற்போது தெரிய வந்திருக்கிறது. அந்த தகவல் தற்போது சோசியல் மீடியாக்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
மகனின் வினோத பழக்கம்:
அதாவது குழந்தைகள் என்றாலே இனிப்பு விரும்பி சாப்பிடுபவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் சிவகார்த்திகேயன் மகன் குகன் குகனுக்கு இனிப்பு என்றாலே பிடிக்கவே பிடிக்காதாம். ஒரு முறை குகனுக்கு ஐஸ்கிரீம் ஊட்டி விட்டதும் அவன் கண்ணீர் விட்டு அழுது விட்டானாம்.

அந்த அளவுக்கு அவன் இனிப்பு சுத்தமாக பிடிக்காதாம். ஆனால் காரமான பண்டங்கள் என்றால் விரும்பி சாப்பிடுவானாம். இந்த காலத்தில் இப்படி ஒரு குழந்தையா?என இதை கேள்விப்பட்டதும் எல்லோரும் ஆச்சரியப்பட்டு விட்டார்கள். எல்லா குழந்தைகளும் இப்படி இருக்க மாட்டாங்க… வெகு சில குழந்தைகள் மட்டுமே இது போன்ற வினோதமான பழக்கமுடையவர்களாக இருப்பாங்க. அதில் சிவகார்த்திகேயன் மகன் குகனும் ஒருவராக இருக்கிறார்.