சிவகார்திகேயனின் வளர்ச்சி:
தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து அதன் பிறகு திரைப்படங்களில் ஹீரோவாக அறிமுகமாகி இன்று நட்சத்திர ஹீரோவாக தமிழ் சினிமாவில் நம்பர் 1 இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.இவர் தன்னுடைய திறமையாலும் உழைப்பாலும் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இன்று நட்சத்திர ஹீரோவாகியுள்ளார்.

டாப் ஹீரோக்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் பார்க்கப்படுகிறார். அவரது நடிப்பில் அண்மையில் வெளிவந்து திரையரங்குகளில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் அமரன். இந்த திரைப்படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூலிட்டி மாபெரும் சாதனை படைத்திருக்கிறது.
அமரன் அபார வெற்றி:
இது சிவகார்த்திகேயனின் மிக முக்கிய படமாகவும் அவரது அந்தஸ்தையும் உயர்த்தி இருக்கிறது. அமரன் திரைப்படத்திற்கு பிறகு அவரது சம்பளம் ரூ.100 கோடிக்கு மேல் தாண்டும் என சினிமாக்காரர்கள் கூறியிருக்கிறார்கள்.
இப்படியான நேரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசிய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதாவது அதில் கூறியிருப்பதாவது…. நான் மரியாதை இல்லாத இடத்தில் இருக்கவே மாட்டேன். விஜய் தொலைக்காட்சியில் எனக்கு மிகுந்த மரியாதை இருந்தது அங்கு எனக்கு பெரிய சம்பளம் எல்லாம் கிடையாது.

மரியாதை இல்லாத இடத்தில் இருக்க மாட்டேன்:
ஆனால் மேடையும் மரியாதையும் கொடுத்தார்கள். அது எனக்கு போதுமானதாக அப்போது தோன்றியது. ஒருவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவரால் எவ்வளவு பெரிய ஆதாயம் இருந்தாலும் எனக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றால், அவரிடம் நான் இருக்கவே மாட்டேன் என சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார். அவரின் இந்த கருத்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டுகளை குவித்து வருகிறது.