முன்னணி ஹீரோ
விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக மக்களிடம் அறிமுகமான சிவகார்த்திகேயன், ரசிகர்களின் மனம் கவர்ந்த தொகுப்பாளராக அக்காலகட்டத்தில் வலம் வந்தார். அந்த சமயத்திலேயே அவர் அடிக்கும் கவுன்ட்டர் நகைச்சுவைகளுக்கு ரசிகர்கள் இருந்தார்கள். அதனை தொடர்ந்து சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்த சிவகார்த்திகேயன், தமிழின் முன்னணி நடிகராக மாறிப்போனார்.

எகிறிய சம்பளம்
“அமரன்” திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படங்களுக்கு தற்போது சிவகார்த்திகேயன் ரூ.75 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அடுத்த இரண்டு திரைப்படங்களில் சிவகார்த்திகேயன் ரூ.100 கோடி சம்பளம் வாங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனின் அடைந்திருக்கும் இந்த உயரம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.