மாவீரன் x ஜெயிலர்
2023 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த “மாவீரன்” திரைப்படம் ஜூலை மாதம் 14 ஆம் தேதி வெளிவந்தது. ஆனால் இத்திரைப்படத்தை முதலில் அந்த ஆண்டில் ஆகஸ்து மாதம் 11 ஆம் தேதிதான் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில்தான் ரஜினிகாந்தின் “ஜெயிலர்” திரைப்படம் அந்த ஆண்டில் ஆகஸ்து மாதம் 10 ஆம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டது.

ரஜினிகாந்த் திரைப்படத்தோடு மோதினால் நமது திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் அடிவாங்கும் என்று நினைத்ததாலோ என்னவோ “மாவீரன்” திரைப்படம் 2023 ஆம் ஆண்டின் ஆகஸ்து மாதத்திற்கு முன்னதாகவே ஜூலை மாதத்தில் வெளிவந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் இது போல ஒரு சம்பவம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மதராஸி x கூலி?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “மதராஸி” திரைப்படத்தை ஆகஸ்து 14 ஆம் தேதி வெளியிட முடிவு செய்யப்பட்டிருந்ததாம்.

ஆனால் “கூலி” திரைப்படம் ஆகஸ்து மாதம் வெளியாகவுள்ளதால் “மதராஸி” திரைப்படம் ஜூலை மாதம் வெளியாக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. 2023 ஆம் ஆண்டில் நடந்த அதே சம்பவம் இப்போதும் நடக்கப்போவதாக இதில் இருந்து தெரிய வருகிறது.