நடிகர் சிவகார்த்திகேயன்:
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஹீரோ என்ற அந்தஸ்தை பிடித்திருக்கும் சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக தனது பணியை தொடங்கி அதன் பிறகு நடிகராக திரைத்துறையில் அறிமுகமாகி இன்று நம்பர் 1 இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தனக்கான மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் அமரன்.
மனச்சோர்வுக்கு கிடைத்த மருந்து:

இந்த திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்திருக்கிறது. இந்த நிலையில் கோவாவில் நடைபெற்ற திரைப்படம் விழா ஒன்றில் பங்கேற்ற சிவகார்த்திகேயன் அங்கு மேடையில் மிகவும் எமோஷ்னலாக பேசிய பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது .
அதாவது என்னுடைய தந்தையின் மரணம் வாழ்க்கையில் எனக்கு மிகப்பெரிய சோர்வை ஏற்படுத்தியது அந்த மனச்சோர்வில் அழுந்தி போய் கிடந்த நான் சினிமாவில் அறிமுகமாகி என்னுடைய பணிகளை தொடர்ந்து செய்து கொண்டிருந்தேன்.

அப்போது பார்வையாளர்களின் விசில்களும் அவர்களின் கைத்தட்டல்களும் எனக்கு மிகச்சிறந்த மருந்தாக மாறியது. அது என்ன என் தந்தையின் மரணத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தேற்றிக்கொண்டு வந்தது என தன்னுடைய மகிழ்ச்சியை மிகவும் எமோஷ்னாக தெரிவித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.