நயன்தாரா-தனுஷ் விவகாரம்
நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடியின் திருமண வீடியோவில் “நானும் ரவுடிதான்” திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட காட்சி ஒன்றை அனுமதியில்லாமல் பயன்படுத்தியிருந்த நிலையில் அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் பத்து கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதனை தொடர்ந்து தனுஷை தாக்கி நயன்தாரா ஒரு அறிக்கை விட அதற்கு பதிலடி தருவது போல் தனுஷ் ஒரு அறிக்கை விட, சமூக வலைத்தளமே பரபரப்பாக மாறியது.

மீண்டும் சிக்கல்
தனுஷ் விவகாரத்திற்கே இன்னும் பதில் தெரியாத நிலையில் தற்போது இது போல் மீண்டும் ஒரு சிக்கலில் சிக்கியுள்ளார் நயன்தாரா. அதாவது நெட்ஃபிலிக்ஸில் வெளியான நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண வீடியோவில் “சந்திரமுகி” திரைப்படம் சம்பந்தப்பட்ட காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது சிவாஜி புரொடக்சன்ஸ் நிறுவனம்.

அதே போல் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தாருக்கும் ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது சிவாஜி புரொடக்சன்ஸ் நிறுவனம்.