நடிகர் திலகத்துக்கு வந்த ஆசை
நடிப்புக்கே பல்கலைக்கழகமாக விளங்கி வந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் வளர்ந்து வந்த புதிதில் திராவிட முன்னேற்ற கழகத்தின் உறுப்பினராக திகழ்ந்து வந்தார். அந்த சமயத்தில் சிவாஜி கணேசன் திருப்பதி கோவிலுக்குச் சென்றது கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அதன் பின் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அதிமுகவை தொடங்கிய எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அணி எனவும் ஜெயலலிதா அணி எனவும் இரண்டு அணிகளாக அதிமுக பிரிந்தது. இந்த சமயத்தில் சிவாஜி கணேசன் தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை தொடங்கினார்.
பலத்த தோல்வி..
1988 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிவாஜி கணேசன் தனது தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை தொடங்கினார். எம்.ஜி.ஆரின் மனைவியான ஜானகியுடன் இணைந்து 1989 ஆம் ஆண்டு தேர்தலை சந்தித்தார். ஆனால் சிவாஜி கணேசன் கட்சி போட்டியிட்ட ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை.

நான் தப்பு பண்ணிட்டேன்…
இந்த சம்பவத்திற்கு பிறகு தான் தவறு செய்துவிட்டதாக மனம் வருந்திய சிவாஜி கணேசன், தனது கட்சியை ஜனதா தள கட்சியில் கொண்டு போய் சேர்த்துவிட்டார். இவ்வாறு 1988 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழக முன்னேற்ற முன்னணி 1989 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.