Monday , 31 March 2025
Home Cinema News அது என் வீடு இல்ல, பிரபு வீடு- சிவாஜி இல்லம் ஜப்தி விவகாரத்தில் வாய்திறந்த ராம்குமார்…
Cinema News

அது என் வீடு இல்ல, பிரபு வீடு- சிவாஜி இல்லம் ஜப்தி விவகாரத்தில் வாய்திறந்த ராம்குமார்…

sivaji ganesan annai illam seize issue ramkumar asked to stop the verdict

அன்னை இல்லம்

நடிகர் திலகமாக புகழ்பெற்ற  சிவாஜி கணேசன் வாழ்ந்த இல்லமான அன்னை இல்லம் சென்னை தி.நகரில் அமைந்துள்ளது. இந்த அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள செய்தி குறித்துதான் கடந்த இரண்டு நாட்களாகவே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

sivaji ganesan annai illam seize issue ramkumar asked to stop the verdict

ஏன் இந்த தீர்ப்பு…

சிவாஜி கணேசனின் பேரனான துஷ்யந்த் “ஈசன் புரொடக்சன்ஸ்” என்ற நிறுவனத்தின் மூலமாக “ஜகஜால கில்லாடி” என்று ஒரு திரைப்படத்தை தயாரித்திருந்தார்.

அந்த வகையில் இத்திரைப்படத்தை தயாரிக்க தயாரிப்பாளர் துஷ்யந்த் தனபாக்கியம் என்டெர்பிரைசஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து ரூ.3.74 கோடி கடனாக பெற்றுள்ளார். 

sivaji ganesan annai illam seize issue ramkumar asked to stop the verdict

இந்த கடனை திருப்பி செலுத்தாததால் தனபாக்கியம் என்டெர்பிரைசஸ் நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வாங்கிய கடனை வட்டியுடன் சேர்த்து ரூ.9.39 கோடியை திருப்பி தரவேண்டும் எனவும் “ஜகஜால கில்லாடி” திரைப்படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் என்டெர்பிரைசஸ் நிறுவனத்திடம் வழங்கவேண்டும் எனவும் தீர்ப்பளித்தார். 

ஆனால் பட உரிமைகளை வழங்க துஷ்யந்த் தரப்பு மறுத்துவிட்டது. இதனை தொடர்ந்து தனபாக்கியம் என்டெர்பிரைசஸ் நிறுவனம் சிவாஜி கணேசனின் வீட்டை பொது ஏலத்திற்கு விடக்கோரி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் துஷ்யந்த் நீதிமன்றத்தில் பதிலளிக்க கால அவகாசமும் கொடுக்கப்பட்டது. 

ஆனால் துஷ்யந்த் தரப்பு நீதிமன்றத்தில் பதிலளிப்பதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

உத்தரவை ரத்து செய்யவேண்டும்

இந்த நிலையில் “அன்னை இல்லம் ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.  ஜப்தி உத்தரவுக்குள்ளான இல்லம் எனது சகோதரர் பிரபுவுக்கு சொந்தமானது” என சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் தரப்பு உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளதாக சில நிமிடங்களுக்கு முன்பு செய்தி வெளியாகியுள்ளது. சிவாஜி கணேசனின் மூத்த மகனான ராம்குமாரின் மகனே துஷ்யந்த் என்பது குறிப்பிடத்தக்கது. 

  • trisha shared the photos which she took with ramya krishnan, suriya, jyothika எல்லோரும் இணையும்போது பலம் கூடுது- ரம்யா கிருஷ்ணன், ஜோதிகா ஆகியோருடன் திரிஷா வெளியிட்ட உருக்கமான வீடியோ…
  • Related Articles

    trisha shared the photos which she took with ramya krishnan, suriya, jyothika
    Cinema News

    எல்லோரும் இணையும்போது பலம் கூடுது- ரம்யா கிருஷ்ணன், ஜோதிகா ஆகியோருடன் திரிஷா வெளியிட்ட உருக்கமான வீடியோ…

    90ஸ் கிட்ஸின் கனவுக்கன்னி 90களில் பிறந்தவர்களிடையே மறக்க முடியாத நடிகையான உருவானவர் திரிஷா. “ஜோடி” திரைப்படத்தில்...

    L2 empuraan movie makers cut ad mute dialogues
    Cinema News

    எம்புரான் படத்தின் வசனங்களை Mute செய்ய முடிவு! பல காட்சிகளை நீக்கவும் திட்டம்? ஏன் இப்படி?

    மாஸ் ஹிட் “L2 எம்புரான்” திரைப்படம் கடந்த 27 ஆம் தேதி வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு...

    jiiva said the process of selecting hero in boss engira bhaskaran movie
    Cinema News

    சீட்டு குலுக்கிப் போட்டு ஹீரோவை செலக்ட் பண்ணாங்க? ஜீவா சொன்ன ஆச்சர்ய தகவல்! சினிமாவுல இப்படியெல்லாம் நடக்குமா?

    சரிவை கண்ட நடிகர் ஜீவா தமிழ் சினிமாவிற்குள் நடிக்க வந்த புதிதில் இளம் கதாநாயகனாக, கோலிவுட்டில்...

    devayani not even acted in single super star rajinikanth movie
    Cinema News

    இவ்வளவு பெரிய நடிகையா இருந்தும் சூப்பர் ஸ்டார்  கூட நடிக்கலையா? என்னப்பா இது!

    நிரந்தர சூப்பர் ஸ்டார் ஒரு சாதாரண பேருந்து நடத்துனராக இருந்த ரஜினிகாந்த் தற்போது தமிழ் சினிமாவின்...