கங்குவாக்கு கிடைத்த வரவேற்பு
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. படத்தின் நீளம் அதிகம் எனவும் படத்தில் சப்தங்கள் காதை கிழிப்பது போல் இருப்பதாகவும் பல விமர்சனங்கள் எழுந்தது. மேலும் “கங்குவா” படத்தின் திரைக்கதையும் சுமாராக இருப்பதாகவே கருத்துக்கள் வெளிவந்தன. மொத்தத்தில் இத்திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

பட வாய்ப்பே இல்லை

இந்த நிலையில் “கங்குவா” படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவாவுக்கு பட வாய்ப்புகளே அமையவில்லை என்று கூறப்படுகிறதாம். எவ்வளவோ முயன்றும் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று சிறுத்தை சிவா தனது நண்பர்களிடம் புலம்பி வருகிறாராம். இவ்வாறு “கங்குவா” படத்தின் தோல்வியால் சிறுத்தை சிவாவுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.