நடிகை ரம்யா பாண்டியன்:
ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் தான் ரம்யா பாண்டியன். இவர் பிரபல நடிகரான அருண்பாண்டியன் அண்ணன் மகள் என்பது குறிப்பிடத்தக்கது .

இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் ஜோக்கர் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். 2015 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஆண் தேவதை போன்ற சில திரைப்படங்களில் மட்டுமே நடித்த ரம்யா பாண்டியன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமானார் .

பிரபலம் ஆனது எப்படி?
அந்த நிகழ்ச்சியில் புகழுடன் சேர்ந்து இவர் ரொமான்டிக் செய்த எபிசோட் மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பை காட்டி போட்டோஷூட் நடத்தி அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்ட ரம்யா பாண்டியன் ஓவர் நைட்டில் பேமஸ் ஆகிவிட்டார் .

இப்படி சின்ன சின்ன விஷயங்களாலே மிகப்பெரிய அளவில் பேமஸான நடிகையாக பார்க்கப்பட்ட ரம்யா பாண்டியன் சமீபத்தில் தான் தன்னுடைய நீண்ட நாள் காதலர் ஆனார் லோவல் என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

ஏன்மா எங்க வயித்தெரிச்சல் கொட்டிக்குற?
திருமணத்திற்கு பிறகு சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக தனது கணவருடன் எடுத்துக் கொள்ள புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ரம்யா பாண்டியன். அந்த வகையில் திருமணத்தின் போது ரொமான்டிக் கிளிக்ஸ் எடுத்துக் கொண்டதை தற்போது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த சிங்கிள்ஸ் எல்லோரும் ஏம்மா இப்படி நீங்க வைத்தெரிச்சலை கொட்டிக்கிறீங்க என காண்டாகி கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள். இருந்தாலும் இந்த அழகான புகைப்படங்களுக்கு லைக் மற்றும் கமெண்ட் குவிந்து வருகிறது