பாடகி சின்மயி:
தென்னிந்திய சினிமாவின் பிரபல திரைப்பட பாடகியாக இருந்து வருபவர்தான் சின்மயி. இவர் பல சர்ச்சைகளில் சிக்கி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். குறிப்பாக வைரமுத்து தன்னை பாலியல் ரீதியாக டார்ச்சர் கொடுத்ததாக கூறிய விவகாரம் சின்மயியை மிகப்பெரிய அளவில் சர்ச்சைக்குரிய நபராக பிரபலப்படுத்தியது.

இந்த நிலையில் இதை அடுத்து இவர் எப்போது எதைப்பற்றி பேசினாலும் அது மிகப்பெரிய செய்தியாக பேசப்படும். அந்த வகையில் சமீபத்தில் செய்தியாளர் ஒருவர் சின்மையிடம் ஒரு பெண்ணுக்கு தைரியம் தன்னம்பிக்கை ஒரு ஆணின் காதலின் மூலம் முழுமையாக கிடைக்கிறதா? என கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த சின்மயி ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை துணை மட்டும் சரியாக அமைந்துவிட்டால் அந்த வாழ்க்கையை ரொம்ப அமைதியாகவும் அழகாகவும் இருக்கும்.
என் கணவர் தான் எனக்கு பெரிய சப்போர்ட்:
ஒரு பெண்ணை பார்த்து பொறாமைப்படாமல் அந்த பெண் நம்மளோட அதிகமா சம்பாதிக்கிறாள் என்ற ஒரு எந்த விதமான ஈகோவும் இல்லாமல் ஒரு ஆண் அமைதியாக அவளை வாழ்க்கை நடத்த விட்டால் அந்த பெண்ணின் வாழ்க்கை ரொம்பவும் அழகாகவும் அமைதியாகவும் இருக்கும் .

என்னோட வாழ்க்கையில் எனக்கு ரொம்ப சப்போர்ட்டா இருந்தது என்னுடைய கணவர் தான். ஆனால், அவர் வருவதற்கு முன்னதாகவே நான் தைரியமான பெண்ணாக தான் இருந்து வந்தேன். இருந்தாலும் அந்த தைரியத்தை வெளியில் கொண்டு வந்தது என்னுடைய கணவர் தான் என கூறினார்.
மேலும் பேசிய அவர்…. பல பெண்களுக்கு அந்த அமைதி என்பதே இல்லை. ஒரு பெண்ணுக்கு திருமணமாகிவிட்டது என்பதற்காக அந்த பெண்ணின் கனவு ஆசை எல்லாத்தையும் விட்டு விட்டு தான் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். ஒரு குடும்பம் அமைதியாக அழகான வாழ்க்கையாக வாழ வேண்டும் என்றால் ஆசைகளை புதைத்துக் கொண்டு இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை ஏன் பெண்கள் வாழ வேண்டு�
புதைத்துக் கொண்டு இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை ஏன் பெண்கள் வாழ வேண்டும்? என்பதுதான் என்னுடைய கேள்வி ஒரு பெண்ணால் ஆண் துணை இல்லாமல் இருக்க முடியாது என்கிற நிலையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
காமத்திற்காக திருமணம்:
அதற்காக கொண்டுவரப்பட்டது தான் திருமணம். திருமணம் செய்து கொண்ட எத்தனையோ தம்பதிகள் புரிதல் காதலோடு வாழ்கிறார்கள். பாதி பேர் காமதிற்காக திருமணம் செய்து கொள்கிறார்கள். சிலர் ஏதோ கல்யாணம் செய்து வைத்தார்கள் குழந்தை பெற்றுக் கொண்டோம் என்பதற்காக வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்கள் .

எனவே திருமணம் என்பதை சரியாக புரிந்து கொண்டு ஒருவரை ஒருவர் நல்ல புரிதலோடு வாழ்க்கை நடத்த வேண்டும். அதுதான் சிறந்த திருமணத்திற்கும் சிறந்த வாழ்க்கைக்கும் அர்த்தம் என சின்மயி அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். சின்மயியின் இந்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரல் ஆகி வருகிறது.