முஃபாஸா: தி லயன் கிங்
2019 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான அட்டகாசமான அனிமேஷன் திரைப்படம் “தி லயன் கிங்”. இத்திரைப்படம் உலக ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தின் தொடர்ச்சியான “முஃபாஸா: தி லயன் கிங்” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இத்திரைப்படத்தின் தமிழ் டப்பிங்கில் அர்ஜூன் தாஸ், அசோக் செல்வன், நாசர், ரோபோ ஷங்கர், சிங்கம் புலி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார்கள்.
மாறி மாறி கலாய்
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு “முஃபாஸா: தி லயன் கிங்” திரைப்படத்தின் தமிழ் டப்பிங்கிற்கான புரொமோஷன் விழா நடைபெற்றது. அதில் இத்திரைப்படத்தில் பின்னணி குரல் கொடுத்த அர்ஜூன் தாஸ், நாசர், அசோக் செல்வன், விடிவி கணேஷ், சிங்கம்புலி, ரோபோ ஷங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது மேடையில் ஆறு பேரும் நிற்க, சிங்கம்புலி பேசியபோது, விடிவி கணேஷை குறிப்பிட்டு, “இந்த ஆளை நான் தான் ரெட் படத்தில் அறிமுகப்படுத்தினேன்” என கூறினார். அதற்கு விடிவி கணேஷ், “இதை சொல்லலைனா இந்த ஆளுக்கு மண்ட வெடிச்சிடும். அதை விட்டுட்டு இப்போ இந்த படத்தை மட்டும் பத்தி பேசு” என கூறினார். இது போல் பல முறை இருவரும் மாறி மாறி கிண்டல் அடித்துக்கொண்டது பார்வையாளர்களை சிரிக்க வைத்தது.