கனவுக்கன்னி
90’ஸ் கிட்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த சிம்ரன் அக்காலகட்டத்தில் இளமை துள்ளும் கதாநாயகியாக இளம் ஆண்களின் மனதை கொள்ளைக்கொண்டு வந்தவர். இப்போதும் சிம்ரனை ரசிக்காத 90’ஸ் கிட்களின் கண்களே இல்லை என்று கூட சொல்லலாம். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு சிம்ரன் குறித்த ஒரு அதிர்ச்சி தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

நடு ரோட்டில் நின்ற சிம்ரன்
20 வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் நடுராத்திரியில் 2 மணிக்கு கலைப்புலி எஸ்.தாணுவிற்கு ஒரு Phone Call வந்ததாம். நடு ராத்திரி ஆனதால் தாணு அந்த Phone Call-ஐ Attend செய்யவில்லையாம். அதன் பிறகு அந்த நம்பரில் இருந்து ஒரு மெசேஜ் வந்ததாம். “நான் தான் சிம்ரன், உங்களிடம் கொஞ்சம் பேசவேண்டும்” என்று எந்த குறுஞ்செய்தி இடம்பெற்றிருந்ததாம்.

உடனே தாணு அந்த நம்பரை தொடர்புகொண்டுள்ளார். “நான் இப்போது லண்டனில் இருக்கிறேன். நான் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் எனக்கு கொடுக்கப்பட்ட நாட்கள் முடிந்துவிட்டதால் என்னை காலி செய்ய சொல்லிவிட்டார்கள். நான் இப்போது குழந்தைகளுடன் நடுரோட்டில் நிற்கிறேன். எனக்கு தங்குவதற்கு இடம் வேண்டும்” என சிம்ரன் உதவி கேட்டுள்ளார்.
உடனே கலைப்புலி தாணு லண்டனில் இருந்த தனது நண்பர் ஒருவருக்கு தொடர்பு கொண்டு சிம்ரனுக்கு வேண்டிய உதவிகளை செய்துகொடுக்கச் சொன்னாராம். இந்த சம்பவத்தை பகிர்ந்துகொண்ட கலைப்புலி எஸ் தாணு, “சிம்ரம் என்றுமே நன்றி மறவாதவர்” என்று புகழ்ந்தார்.