STR
நடிகர் சிலம்பரசன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்தாலும் அவர் பல திரை இசைப் பாடல்களை பாடியுள்ளார். கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது. அந்த வகையில் இசைக் கச்சேரிகளில் அவரை பாட வைக்க சம்பந்தப்பட்ட விழா நிர்வாகத்தினர் முந்தியடிப்பது உண்டு.
சிங்கப்பூரில் செய்த சம்பவம்
இந்த நிலையில் சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற யுவன் ஷங்கர் ராஜாவின் கான்செட் ஒன்றில் சிலம்பரசன் பல பாடல்களை பாடியுள்ளார். அவர் பாடிய பாடல்கள் ரசிகர்களை உற்சாகமூட்டியுள்ளன. பொதுவாக சிம்புவின் மீது ஒரு விமர்சனம் உண்டு. அதாவது அவர் படப்பிடிப்பிற்கு தாமதமாகவே வருவார் என்று.

ஆனால் சிங்கப்பூரில் நடைபெற்ற கான்செர்டில் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சரியான நேரத்தில் ஆஜர் ஆகியிருந்தாராம் சிம்பு. கான்செட்டிற்கு முந்தைய ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் முதல் ஆளாக வந்து அமர்ந்திருந்தாராம். அதே போல் இசைக் கச்சேரி நடந்த மேடையிலும் சரியான நேரத்தில் தோன்றியுள்ளார். இது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியதாம். “நம்ம STR-ஆ இது?” என வாயை பிளந்தார்களாம்.