சிம்புவும் நயனும்
பல ஆண்டுகளுக்கு முன்பு சிம்புவும் நயன்தாராவும் காதலித்து வந்த செய்தி அன்றைய கோலிவுட் உலகில் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட செய்தியாகும். இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் ஊடகங்கள் வழியாக வெளிவந்து ரசிகர்களின் கவனத்திற்குள்ளாக்கியது.

எனினும் சில ஆண்டுகள் கழித்து சில தனிப்பட்ட காரணங்களால் இருவரும் பிரேக்கப் செய்துகொண்டனர். இவர்கள் இருவரும் காதலித்து வந்த சமயத்தில் இருவரும் இணைந்து நடித்த “வல்லவன்” திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து பல ஆண்டுகள் கழித்து “இது நம்ம ஆளு” என்ற திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். அதன் பிறகு வேறு எந்த திரைப்படத்திலும் இருவரும் இணைந்து நடிக்கவில்லை.
இருவரும் ஒரே மேடையில்…
இந்த நிலையில் பிரபல சினிமா பத்திரிக்கையாளரான பிஸ்மி, தனது X தளத்தில் “நாளை ஒரே மேடையில் சிம்பு-நயன்தாரா” என்று ஒரு பதிவை பதிவேற்றியுள்ளார். அதாவது நாளை “டிராகன்” திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற உள்ள நிலையில் இவ்விழாவில் நயன்தாராவும் சிம்புவும் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாக சூசகமாக கூறியுள்ளார்.

“டிராகன்” திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் “LIK” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை நயன்தாரா தயாரித்து வருகிறார். அதே போல் “டிராகன்” திரைப்படத்தை இயக்கியுள்ள அஸ்வத் மாரிமுத்து சிம்புவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளார். இதன் காரணமாக “டிராகன்” பட ஆடியோ விழாவில் சிம்புவும் நயன்தாராவும் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.