பிறந்த நாளில் இன்ப அதிர்ச்சி
சிம்பு தற்போது மணிரத்னத்தின் “தக் லைஃப்” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்தை தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அதனை தொடர்ந்து “பார்க்கிங்” பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ள திரைப்படமும் ஒன்று. இந்த மூன்று திரைப்படங்கள் குறித்தான முக்கிய அறிவிப்பு வருகிற பிப்ரவரி 3 ஆம் தேதி சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளிவர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனிருத் வேண்டாம்?
அஸ்வத் மாரிமுத்து சிம்புவை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்திற்கு முதலில் அனிருத்தான் இசையமைப்பதாக இருந்ததாம். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு மலேசியாவில் சிம்பு, யுவன் ஷங்கர் ராஜாவின் கான்செர்ட்டில் பாடியபோது அங்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பை பார்த்த பிறகு, அஸ்வத் மாரிமுத்துவிடம் “இத்திரைப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவைதான் இசையமைப்பாளராக அமர்த்தவேண்டும்” என கூறிவிட்டாராம்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் சிம்பு நடித்த திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.