லிட்டில் சூப்பர் ஸ்டார்
சிலம்பரசன் தனது 5 வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். சுட்டியாக இருந்தபோதே தனது சுட்டித்தனமான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்த சிலம்பரசன், “லிட்டில் சூப்பர் ஸ்டார்” என்ற பட்டத்தையும் பெற்றார். அதனை தொடர்ந்து இடைப்பட்ட காலகட்டத்தில் கெரியரில் ஒரு சிறு தொய்வு ஏற்பட, மீண்டும் “மாநாடு” திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அதில் இருந்து ATMAN என்ற பட்டத்தை தனக்கு கொடுத்துக்கொண்டார்.

ரஜினியாக மாறிய சிம்பு
சிலம்பரசன் ஒரு தீவிர ரஜினி ரசிகர் என்பது பலரும் அறிந்ததே. அந்த வகையில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நட்சத்திர விழாவில் நடிகை சிம்ரனுடன் தளபதி திரைப்படத்தில் இடம்பெற்ற “ராக்கம்மா கைய தட்டு” பாடலுக்கு சிலம்பரசன் ரஜினிகாந்தை போலவே ஸ்டைலாக நடனமாடி உள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Rakkama kaiya Thattu ?????
— GOAT?? (@GOAT_OFFCl) December 16, 2024
Very nice ☺️ ☺️ ☺️ ☺️ ??@SilambarasanTR_ @SimranbaggaOffc
#SilambarasanTR #Simran ??? pic.twitter.com/IOB12HgSyC