Back to Form
சில ஆண்டுகளுக்கு முன்பு சில காரணங்களால் சிம்புவின் கெரியர் கொஞ்சம் ஆட்டம் கண்டது. அதன் பின் மீண்டும் தற்போது அவரது கெரியர் சூடுபிடித்துள்ளது. மணிரத்னம் இயக்கிய “தக் லைஃப்” திரைப்படத்தில் நடித்து வந்த சிம்பு, அதனை தொடர்ந்து மூன்று திரைப்படங்களில் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். அந்த வகையில் சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை “பார்க்கிங்” பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளார்.

செம ரோல்!
இந்த நிலையில் இத்திரைப்படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் குறித்த ஒரு ஆச்சரிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படத்தில் சிம்பு ஒரு கல்லூரி ஆசிரியராக நடிக்க உள்ளாராம். சிம்பு பல திரைப்படங்களில் கல்லூரி மாணவராக நடித்திருக்கிறார். தனது திரைத்துறை வரலாற்றில் முதன்முதலாக சிம்பு ஒரு கல்லூரி ஆசிரியராக இதில் நடிக்க உள்ளார் என்பது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
