தக் லைஃப்
“பத்து தல” திரைப்படத்தை தொடர்ந்து சிம்பு, மணி ரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து “தக் லைஃப்” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு வெளிவரவுள்ளது. இத்திரைப்படத்தை தொடர்ந்து “ஓ மை கடவுளே” இயக்குனரான அஸ்வத் மாரிமுத்துவுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளிவந்தது.

வித்தியாசமான காம்போ
இந்த நிலையில் சிலம்பரசன் அடுத்ததாக “பார்க்கிங்” திரைப்படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணனுடன் கைக்கோர்க்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளிவந்த “பார்க்கிங்” திரைப்படம் வித்தியாசமான கதைக்களத்துடன் ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது.
கமல்ஹாசன் தயாரிப்பில் சிலம்பரசன் நடித்து வந்த திரைப்படம் டிராப் என்று கூறப்படும் நிலையில் தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணனுடன் இணையவுள்ளார் சிம்பு.