பன்முக கலைஞன்
சிலம்பரசன் ஒரு மிகச் சிறந்த நடிகர் என்பதை நம் அனைவரும் அறிவோம். நடிப்பையும் தாண்டி அவர் ஒரு சிறந்த பாடகரும் கூட. கிட்டத்தட்ட 150 திரை இசைப் பாடல்களை சிலம்பரசன் பாடியுள்ளார். அது மட்டுமல்லாது சிலம்பரசன் ஒரு இயக்குனரும் கூட. இவ்வாறு பல்வேறு தளங்களில் மிகவும் திறமைசாலியாக திகழ்ந்து வருகிறார் சிலம்பரசன்.

ஆங்கில படம்
இந்த நிலையில் நடிகர் சிலம்பரசன் ஆஸ்கர் விருது வாங்கிய ஒரு ஆங்கில திரைப்படத்திற்கு பின்னணி குரல் கொடுத்திருக்கிறார். கடந்த 2009 ஆம் ஆண்டு டானி பாய்ல் இயக்கி தேவ் படேல், அனில் கபூர், இர்ஃபான் கான் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான ஆங்கில திரைப்படம் “ஸ்லம்டாக் மில்லினியர்”. இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

ஆஸ்கர் விருதுகள்
இத்திரைப்படத்திற்கு 8 ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை ஏ.ஆர்.ரஹ்மான் கைப்பற்றினார். இந்த நிலையில் இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த தேவ் படேல் கதாபாத்திரத்திற்கு தமிழில் சிலம்பரசன் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார். இந்த தகவல் பலரும் அறியாத தகவலாக இருந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் இத்தகவல் வெளிவந்துள்ளது.