STR 48
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள 48 ஆவது திரைப்படத்தின் அறிவிப்பு வெளிவந்தது. இத்திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் காலப்போக்கில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இத்திரைப்படத்தின் பட்ஜெட் ரூ.150 கோடியை தாண்டும் என தகவல் வெளிவந்தது. இந்த பட்ஜெட்டை தன்னால் தாக்குப்பிடிக்க முடியாது என்று கமல்ஹாசன் இந்த புராஜெக்ட்டை விட்டு வெளியேறியதாகவும் கூறப்பட்டது.

தயாரிப்பாளராக களமிறங்கிய சிம்பு
இந்த நிலையில் இன்று தனது 42 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் சிலம்பரசன், தேசிங்கு பெரியசாமியுடன் தான் இணையும் திரைப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இத்திரைப்படத்தை தனது 50 ஆவது திரைப்படமாக “Atman Cine Arts” என்ற தனது நிறுவனத்தின் சார்பாக சிம்புவே தயாரிக்கிறார்.
தேசிங்கு பெரியசாமி-சிம்பு கூட்டணியில் உருவாகும் இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் டிராப் என்று இணையத்தளத்தில் வதந்திகள் பரவிய நிலையில் இத்திரைப்படம் Take Off ஆக உள்ளது என்பதை சிம்பு இன்று உறுதிசெய்துள்ளார்.