பேன் இந்திய வெற்றி
அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “புஷ்பா 2” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. “புஷ்பா” திரைப்படத்தின் முதல் பாகம் மாபெறும் வெற்றியை பெற்ற நிலையில் தற்போது “புஷ்பா 2” திரைப்படமும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவந்து பேன் இந்திய வெற்றியை பெற்றுள்ளது.

திருவிழாவாக மாறிய புரோமோஷன்….
கடந்த நவம்பர் மாதம் “புஷ்பா 2” திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு புரோமோஷன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்றது. அந்த வகையில் பீகார் மாநிலத்தின் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் “புஷ்பா 2” திரைப்படத்தின் புரோமோஷனிற்காக அல்லு அர்ஜூனும் படக்குழுவினரும் ரசிகர்களை சந்தித்தனர். அப்போது அல்லு அர்ஜூனை பார்ப்பதற்காக அலைகடலென ரசிகர்கள் திரண்டிருந்தார்கள்.
வம்பிழுத்த சித்தார்த்

இந்த நிலையில் சித்தார்த், தனது “மிஸ் யூ” திரைப்படத்தின் புரோமோஷன் பணிக்காக சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது நிருபர் அல்லு அர்ஜூனை பார்ப்பதற்காக கூடிய கூட்டத்தை குறித்து கேட்க, அதற்கு சித்தார்த், “கூட்டம் கூடுறதுங்குறது இந்தியால பெரிய பிரச்சனை கிடையாது. JCB வச்சா கூடதான் கூட்டம் கூடும். பீகார்ல கூட்டம் கூடுனதுங்குறது பெரிய விஷயம் இல்லை. மைதானம் போட்டு ஒருங்கமைத்தால் கூட்டம் கூடிவிடும். இந்தியாவில் கூட்டம் கூடுவதற்கும் Qualityக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என பதிலளித்தார்.
சித்தார்த்தின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அல்லு அர்ஜூன் ரசிகர்கள் சித்தார்த்திற்கு மிக கடுமையாக பதிலடி கொடுத்து வருகிறார்கள்.