உலக சாதனையை நிகழ்த்திய ராஜா…
உலக இசை வரலாற்றில் ஒரு புதிய சாதனையை படைத்திருக்கிறார் இசைஞானி இளையராஜா. மொசார்ட், பீத்தோவன் ஆகியோரின் வரிசையில் லண்டனின் ராயல் பிலோர்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து “வேலியண்ட்” என்ற தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றியுள்ளார் இளையராஜா. இந்த சாதனையை புரிந்த முதல் இந்தியர் இளையராஜாதான். உலகத் தமிழர்கள் பலரும் இந்த சாதனையை கொண்டாடி வருகின்றனர். உலக இசை வரலாற்றில் ஒரு தமிழரின் பெயர் பொறிக்கப்பட்டுவிட்டதாக பலரும் உணர்ச்சி மிகுதியில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இளையராஜாவை புறக்கணிக்கும் தேசிய ஊடகங்கள்?
இந்த நிலையில் பிரபல பின்னணி பாடகியான ஸ்வேதா மோகன், தனது X தளத்தில் எழுப்பியுள்ள கேள்வி இந்தியா முழுவதிலும் கவனம் பெற்றுள்ளது. “NDTV, CNN போன்ற தேசிய ஊடகங்கள் ஏன் இளையராஜாவின் சிம்பொனியை குறித்து எந்த செய்தியையும் வெளியிடவில்லை.யாராவது இதை இங்கு விளக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்வேதா மோகனின் இந்த டிவிட் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.