விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி. ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
குறிப்பாக இந்த நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்கப் போவதில்லை அவருக்கு மாறாக நடிகர் விஜய் சேதுபதி தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார் என்று அறிவிப்பு வந்த உடனே எல்லோருடைய எதிர்பார்ப்பும் அதிகரித்தது .
விஜய் சேதுபதி இதற்கு சரிப்பட்டு வருவாரா? கமல்ஹாசன் ரேஞ்சுக்கு அவர் பேசப்படுவாரா? என்றெல்லாம் கேள்வி வந்தது.
அந்த அனைத்து விதமான கேள்விகளுக்கும் விஜய் சேதுபதி முற்றுப்புள்ளி வைத்தார். ஓரளவுக்கு அவர் சிறப்பாகவே நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் .
சில பேருக்கு அவர் போட்டியாளர்களுடன் கடுமையாக. நடந்து கொள்வது பிடிக்கவில்லை என கூறி வருகிறார்கள் .
இப்படி இருக்க… இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் யார் யார் கலந்து கொள்ள போகிறார்கள்? என்ற ஒரு எதிர்பார்ப்பு இருந்த சமயத்தில் குக் வித் கோமாளி பிரபலமான ஸ்ருதிஹா சத்தமே இல்லாமல் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் .
மக்கள் பலரும் அவர் தமிழ் பிக்பாஸுக்கு வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நாங்க உங்களை ரொம்ப பண்றோம். நீங்க அங்க போயிட்டீங்களே என கேட்டு வந்தனர்.
ஸ்ருதிகா ஆரம்பத்திலிருந்து ஹிந்தி பிக் பாஸில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார் என்று சொல்லலாம். ஒட்டுமொத்த ஆடியன்ஸ் கவனமும் அவர் மீது திரும்பி இருக்கிறது .
எப்போதும் போல தனது குறும்புத்தனமான பேச்சாளும் நடவடிக்கையாலும் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பவர். ஆனால் ஆரம்பத்தில் ஹிந்தி ரசிகர்களுக்கு அது பிடிக்கவில்லை.
இருந்தாலும் போகப்போக அதுதான் அவரது குணம் என தெரிந்து கொண்டு அதையும் ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
இது இப்படியே போனால் ஹிந்தி பிக் பாஸ் 18வது சீசன் போட்டியாளர் டைட்டில் வின்னராக ஸ்ருதிகா தான் அறிவிக்கப்படுவார் என பேச்சுக்கள் எழுந்து வருகிறது .
பிரச்சனையும் இங்குதான் ஆரம்பித்திருக்கிறது. ஸ்ருதிஹா தமிழ் பெண் என்பதால் அவருக்கு டார்ச்சர் நடந்துவருவதாக கூறப்படுகிறது.
ஒரு தமிழ் பெண் வந்து டைட்டில் வெல்வதா? என்று அங்கு பாலிடிக்ஸ் நடந்து வருகிறது. அதாவது, அவருக்கு கொடுமைகள் டார்ச்சர் எல்லாம். ஆரம்பித்துவிட்டது .
பொதுவாக ஸ்ருதிகாவிற்கு காபி என்றால் மிகவும் பிடிக்கும் என ஆரம்பத்திலிருந்து கூறி வந்தார். எது அவருக்கு பிடிக்கும் என்ன தெரிந்து கொண்டனர் .
இதையும் படியுங்கள்: குண்டனுக்கு சாப்பாடு பத்தாதது… பிக்பாஸில் நடந்த கொடுமை – கண்ணீர்விட்ட ரவீந்தர்!
பிறகு அங்கு அவருக்கு காபி கொடுக்காமல் அவரை டார்ச்சர் செய்து வந்தார்கள். ஒரு. ஒரு கட்டத்திற்கு மேல் மிகவும் அப்செட் ஆன ஸ்ருதிஹா எனக்கு காபி குடிக்காமல் டாய்லெட் வரவில்லை என கூறி கதறி அழுகிறார்.
இந்த வீடியோவை பார்த்த நெடிசன் பலரும் ஸ்ருதிகாவை இயற்கை உபாதை கூட கழிக்க விடாமல் இவ்வளவு கொடுமைப்படுத்துகிறார்களா?
தமிழ் பெண் என்பதால் தான் ஹிந்தி பிக் பாகத்தில் எவ்வளவு கொடுமை டார்ச்சர் நடக்கிறதா?என கேள்வி எழுப்பி கண்டனங்கள் தெரிவித்து வருகிறார்கள்.