விடுதலை 2
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்த “விடுதலை பார்ட் 1” திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது.
தாமதமான இரண்டாம் பாகம்
ஆனால் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் நடைபெற்றது. இதனால் இத்திரைப்படத்தின் வெளியீடு தாமதமாகிக்கொண்டே போனது. “வடசென்னை 2” திரைப்படம் போல் “விடுதலை 2” திரைப்படமும் கேள்விக்குறியாகிவிடுமோ என்றெல்லாம் பேச்சுக்கள் வரத்தொடங்கின. ஆனால் “விடுதலை 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒருவழியாக முடிந்து டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டது.

இன்று திரையரங்குகளில்…
இந்த நிலையில் “விடுதலை 2” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. காலை முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் பலரும் திரைப்படம் அருமையாக இருப்பதாக கூறி வருகின்றனர். இந்த நிலையில் “விடுதலை 2” திரைப்படத்தை கண்டுகளித்தவர்களிடமிருந்து ஒரு அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அதாவது “விடுதலை 2” திரைப்படத்தோடு இத்திரைப்பட வரிசை முடிந்துவிடுகிறதாம்.”விடுதலை 3” வர வாய்ப்பில்லை என கூறுகிறார்கள்.