ஷாரிக்:
பிரபல நடிகரான ரியாஸ் கான் தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரங்களிலும் குணசத்திர கதாபாத்திரங்களில் நடித்து பெரும் புகழ்பெற்றார். இவரது மகன் தான் ஷாரிக். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக மக்களுக்கு பிரபலமானார்.
இதையடுத்து ஷாரிக் மரியா என்ற பெண்ணை சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். மரியா ஏற்கனவே வேறொரு நபரை திருமணம் செய்து விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு 8 வயதில் ஒரு மகளும் இருக்கிறார். ஷாரிக் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள் .
மகளுடன் ஷாரிக்:
இந்த நிலையில் தன்னுடைய மனைவி மரியாவுக்கு முன்னாள் கணவருடன் பிறந்த மகளை ஷாரிக் தன்னுடைய பெத்த பிள்ளை போல பார்த்துக் கொள்கிறார். அந்த வீடியோவில் படிக்க வைப்பது, குளிக்க வைப்பது, ஷாப்பிங் செல்வது , தூங்க வைப்பது உள்ளிட்ட பல செயல்களை கூட இருந்து பார்த்து பார்த்து செய்கிறார் ஷாரிக் .
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இருந்தாலும் இந்த வீடியோவில் ஷாருக் தன்னுடைய மகளுடன் மிகவும் நெருக்கமாக இருப்பதை பார்த்த பல பேர் கொஞ்சம் தள்ளியே இருங்க..வயசு பிள்ளையுடன் இவ்வளவு நெருக்கம் காட்ட வேண்டாம் என கூறி வருகிறார்கள். சிலர் அதை விமர்சித்தாலும் பலபேர் அது சரிதான் எனக் கூறி வருகிறார்கள். இருந்தாலும் ஷாருக்கின் இந்த பாசப்பிணைப்பு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதோ இந்த வீடியோ: