பிரம்மாண்டம்னா ஷங்கர்தான்…
தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவே வியந்து பார்க்கிற ஒரு பிரம்மாண்ட இயக்குனர்தான் ஷங்கர். இவரது திரைப்படங்கள் ஹாலிவுட்டிற்கே சவால் விடும் வகையில் இருக்கும் என்ற கருத்தில் மிகை எதுவும் இல்லை. அந்த வகையில் தற்போது ஷங்கரின் மகனான அர்ஜித் ஷங்கர் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளாராம்.

உதவி இயக்குனர் டூ ஹீரோ…
அர்ஜித் ஷங்கர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது பிரபு தேவா இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளாராம். ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் கதாநாயகியாக திகழ்ந்து வரும் நிலையில் ஷங்கரின் மகனும் தற்போது கதாநாயகனாக அறிமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
