பிரம்மாண்ட இயக்குனர்
தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவிலேயே மிகப் பிரம்மாண்டமான இயக்குனர் என்று அறியப்படுபவர் ஷங்கர். ஹாலிவுட்டிற்கே சவால் விடும் இவரது காட்சியமைப்புகள் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தன. “எந்திரன்” என்ற திரைப்படத்தின் மூலம் அதனை நிரூபித்துக்காட்டினார் ஷங்கர். இந்த நிலையில் இயக்குனர் ராஜமௌலி, சமீபத்தில் இயக்குனர் ஷங்கரை குறித்து ஒரு முக்கிய விஷயத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

இன்ஸ்பிரேஷன்
ஷங்கருக்கு அடுத்தபடியாக பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் பெற்றவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவர தயாராக உள்ள “கேம் சேஞ்சர்” திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய எஸ்.எஸ்.ராஜமௌலி “இப்போதெல்லாம் பல இயக்குனர் பெரிய பட்ஜெட் படங்களை எடுக்க என்னைப் போன்றவர்கள்தான் இன்ஸ்பிரேஷன் என்கிறார்கள்.

ஆனால் நாங்கள் உதவி இயக்குனர்களாக இருந்த சமயத்தில் எங்களுக்கு இன்ஸ்பிரேஷன் என்றால் அது ஷங்கர்தான். பெரிய பட்ஜெட் திரைப்படங்களை சிறப்பாக தருவதில் அவர் OG” என்று எஸ்.எஸ்.ராஜமௌலி