தயாரிப்பாளர் ஷங்கர்…
ஷங்கர் இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்பதை பலரும் அறிந்திருப்போம். ஆனால் அவர் ஒரு வெற்றிபெற்ற தயாரிப்பாளரும் கூட. அவர் இயக்கிய “முதல்வன்” திரைப்படம்தான் அவர் தயாரித்த முதல் திரைப்படம். அதன் பின் அவர் தயாரித்த திரைப்படங்கள் வேறு இயக்குனர்களால் இயக்கப்பட்டதாகும்.

“காதல்”, “இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி”, “வெயில்”, “கல்லூரி”, “அறை எண் 305-ல் கடவுள்”, “ஈரம்”, “ரெட்டைச்சுழி”, “அனந்தபுரத்து வீடு” போன்ற திரைப்படங்கள் ஷங்கரின் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் ஆகும். இந்த நிலையில் அவர் தயாரித்த “காதல்” திரைப்படத்தை குறித்த ஒரு ஆச்சரிய தகவலை குறித்து பார்க்கலாம்.
ஒரு ரெண்டு கோடி கொடுங்க…
ஒரு நாள் ஷங்கரின் உதவியாளரான பாலாஜி சக்திவேல், “என் கிட்ட ரெண்டு கோடி ரூபாய் தாங்க. காதல் படத்தை அழகா படமாக்கி அந்த ரெண்டு கோடியை திருப்பித் தரேன்” என்று கூறினாராம். அந்த சமயத்தில் ஷங்கர், சொந்தமாக அலுவலகம் அமைக்க ஒரு கட்டடத்தை வாங்க வேண்டும் என்று நினைத்து வந்தாராம்.

“காதல் படத்தை தயாரிக்கலாம். அதில் முதலீடு செய்த காசு திரும்ப வந்தால் சொந்தமாக ஆஃபீஸ் போடலாம். இல்லை என்றால் விட்டுவிடலாம்” என்று ஒரு முடிவுக்கு வந்தாராம் ஷங்கர். அதன் படி அவர் தயாரித்த திரைப்படம்தான் “காதல்”. இத்திரைப்படத்தின் மூலம் அவருக்கு அதிக லாபம் கிடைத்தது. அதன் பிறகுதான் அவர் சொந்தமாக அலுவலகம் திறந்தாராம்.