சாதனை படைத்த அஜித்
அஜித்தின் முதல் காதல் ஷாலினி என்றால் இரண்டாவது காதல் மோட்டார் ரேஸ். இளம் வயதில் இருந்தே கார் ரேஸில் அதிக ஈடுபாடு உடையவர் அஜித்குமார். கார் ரேஸில் ஈடுபட்டு மிகப்பெரிய விபத்தில் சிக்கி மருத்துவமனையில் பல மாதங்கள் சிகிச்சை எடுத்த வரலாறெல்லாம் அஜித்திற்கு உண்டு. எனினும் தனது காயங்களை எல்லாம் பாடங்களாக ஏற்று மீண்டு வந்தார் அஜித்.

ஒரு புறம் பல திரைப்படங்களில் மாஸ் காட்டி வரும் அஜித்குமார், மற்றொரு புறம் கார் போட்டியில் ஈடுபடுவதில் தனது முழு வாழ்க்கையையே அர்ப்பணித்து வருகிறார். இந்த நிலையில் துபாயில் நடைபெற்ற 24H கார் ரேஸில் அஜித்குமாரின் அணி கலந்துகொண்டு மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை அஜித் ரசிகர்கள் உட்பட சமூக வலைத்தளங்களில் பலரும் கொண்டாடி வருகின்றனர்.
அன்பு மழை பொழிந்த ஷாலினி….
அஜித்தின் அணி மூன்றாவது இடத்தை பிடித்ததை ஒட்டி மகிழ்ச்சியில் பூரித்துப்போன ஷாலினியும் அஜித்தின் மகளும் அஜித்தை கட்டியணைத்து அன்பு மழை பொழிந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. Sweetest Video of the internet என்று பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
The Most Sweetest Video On The Internet Today ?♂️??♀️❣️#AjithKumarRacing pic.twitter.com/hv4JL6JWVw
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) January 12, 2025