பாலிவுட் பாட்ஷா…
நடிகர் ஷாருக்கான் பாலிவுட் திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். சமீப காலமாக அவரது பல திரைப்படங்கள் தோல்வியை தழுவினாலும் “பதான்”, “ஜவான்” போன்ற திரைப்படங்கள் மீண்டும் அவரது இருப்பை பாலிவுட்டுக்கு காட்டியது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட கலைப்புலி எஸ்.தாணு ஷாருக்கான் குறித்து கூறிய ஒரு சம்பவம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஊழியர்களை கண்டபடி திட்டிய ஷாருக்கான்…
“ஷாருக்கான் Publicity-க்காக 11 பேர் கொண்ட ஒரு குழுவையே வைத்திருக்கிறார். அவர்களுக்கு மாதம் சம்பளமும் கொடுத்து வருகிறார். ஒரு முறை அவர்களுக்கு மீட்டிங் வைத்த ஷாருக்கான், ‘நீங்களாம் இவ்வளவு படிச்சிருக்கீங்க. ஆனா படிக்காத ஒருத்தர் ரஜினிகாந்த் படத்திற்கு வானத்தில் புரொமோஷன் செய்திருக்கிறார். நீங்களாம் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?’ என கேட்டார்” என்று தாணு அப்பேட்டியில் தன்னை பற்றி ஷாருக்கான் குறிப்பிட்டிருந்ததை பகிர்ந்துகொண்டார்.

கலைப்புலி எஸ்.தாணு, “கபாலி” திரைப்படத்திற்காக விமானத்தில் விளம்பரம் செய்தார். அதை குறிப்பிட்டுத்தான் ஷாருக்கான் இவ்வாறு கூறியுள்ளார்.