உத்வேகமூட்டும் வளர்ச்சி
இரு காலகட்டத்தில் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றினார் சிவகார்த்திகேயன். மேலும் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்துகொண்டார். ஆனால் சிவகார்த்திகேயன் இப்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகராக வலம் வருகிறார். எந்த வித பலமான பின்னணியும் இல்லாத எளிய குடும்பத்தில் இருந்து சினிமாவில் நடிக்க வருபவர்களுக்கு சிவகார்த்திகேயனின் வளர்ச்சி உத்வேகமூட்டக் கூடிய ஒன்றாக இருக்கிறது.

நான் அவருக்கு நடுவரா இருந்தேன், ஆனா இப்போ?
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விழாவில் நடிகர் ஷாம் கலந்துகொண்டபோது பத்திரிக்கையாளர் ஒருவர் சிவகார்த்திகேயன் குறித்து கேட்க அதற்கு ஷாம், “நான் நடன நிகழ்ச்சியில் நடுவராக இருந்தபோது சிவகார்த்திகேயன் போட்டியாளராக இருந்தார். இப்போது அவர் எப்படி இருக்கிறார் பாருங்கள் என்று எல்லோரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் எனக்கு அதில் எந்த பிரச்சனையும் இல்லை. எல்லாமே கடவுள் அமைத்துக்கொடுத்த பாதைதான். அடுத்தவர்களை பார்த்து பொறாமைப் படாமல் நமக்கு கடவுள் என்ன கொடுத்திருக்கிறாரோ அதற்கு நன்றி சொன்னாலே நாம் சந்தோஷமாக இருக்கலாம்” என பதிலளித்தார். இவரது பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.