நடிகர் தனுஷ் வளர்ச்சி:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்து நட்சத்திர அந்தஸ்தை கொடுத்திருக்கிறார். அண்ணன் செல்வராகவன் தன்னுடைய தந்தை கஸ்தூரி ராஜாவின் உதவியுடன் சினிமாவில் வந்தாலும் தன்னுடைய தனி திறமையால் இன்று தனக்கென தனி சாம்ராஜ்யத்தையே நடிகர் தனுஷ் உருவாக்கி வைத்திருக்கிறார் .

அண்மையில் நயன்தாராவுடன் சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்று செல்வராகவன் தன்னுடைய தம்பியும் நடிகருமான தனுஷ் குறித்து பேசிய கருத்து சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது .
இரவு பகல் பார்க்காமல் உழைக்கும் தனுஷ்:
அதில் அவர் கூறி இருப்பதாவது தனுஷின் கடின உழைப்பை பார்த்து எனக்கு வியப்பாக இருக்கிறது. ராட்சசன் ஆக தனுஷ் உழைக்கிறார். இரவு பகல் பார்க்காமல் தூங்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறான். எனக்கு பொறாமையாக இருக்கிறது.

நாமும் இப்படி இருந்திருக்கலாமே எனக்கு தோன்றுகிறது. தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் போது அவர் கூறுவதை நாம் அப்படியே செய்ய வேண்டும் என இல்லை. ஆனால் அதை கேட்காமல் செய்தால் போதுமானது. அவருக்கு என்ன வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார் தனுஷ் என செல்வராகவன் கூறியிருக்கிறார்.
தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி:
அவரின் இந்த பேட்டி தனுஷின் ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்திருக்கிறது. குறிப்பாக இரவு பகல் பார்க்காமல் உழைக்கிறார் என்ற வார்த்தை தான் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. ரசிகர்களை மகிழ்விப்பதற்காக நடிகர் தனுஷ் தொடர்ந்து இப்படி இரவு பகல் பார்க்காமல் உழைத்து ஓடிக்கொண்டே இருக்கிறார் என்பதை கேட்கும் போது தனுஷ் ரசிகர்கள் சந்தோஷம் அடைந்துள்ளனர்.

இட்லி கடை என்ற திரைப்படத்தை தனுஷ் இயக்கி வருகிறார். அதை அடுத்து குபேரா திரைப்படம் வெளியாக இருக்கிறது. மேலும், செல்வராகவனின் நடிப்பில் 29ஆம் தேதி சொர்க்கவாசல் திரைப்படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.