தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வந்த நடிகர் விஜய் சினிமாவை அறவே விட்டுவிட்டு தற்போது அரசியலில் இறங்கி இருக்கிறார் .
தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை துவங்கி இருக்கும் நடிகர் விஜய் சமீபத்தில் தான் தனது முதல் மாநில மாநாட்டை நடத்தி முடித்தார்.
அப்போது பேசிய விஜய் பல அரசியல் கட்சிகளை விமர்சித்தும் தனக்கு எதிரி திமுக தான் என்றெல்லாம் பேசியது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
முன்னதாக விஜய் குறித்து சீமான் எங்களுக்குள் ஆயிரம் இருந்தாலும் விஜய் என்னுடைய தம்பி… எனக்கு எதிராகவே விஜய் நடந்து கொண்டாலும் அவரை நான் எப்போதுமே ஆதரிப்பேன் என வீர வசனங்களை எல்லாம் கடந்த அக்டோபர் மாதம் பேசியிருந்தார் .
இப்படி இருக்க நடிகர் விஜய் மாநாட்டில் பேசியபோது சீமானை கூட விமர்சித்து தள்ளி இருந்தார். அதாவது புரட்சி பண்றேன்னு கத்தி கத்தி கூச்சலிட்டு அரசியல் பேசுவதற்கெல்லாம் நான் இங்கு வரவில்லை என மறைமுகமாக சீமானை தாக்கி பேசியிருந்தார்.
இது குறித்து பத்திரிகையாளர்களும் கூட சீமானிடம் கேள்வி எழுப்பினார்கள். இந்த விவகாரம் இப்படியாக இருக்க தற்போது சீமான் விஜய் குறித்து அவதூறு பேசியிருப்பது தான் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.
மேலும், மாநாட்டில் பேசிய விஜய் திராவிட கொள்கை மற்றும் தமிழ் தேசியத்தை நாம் பிரித்து பார்க்கப் போவதில்லை. இரண்டுமே நம் கண்கள் போல என்று விஜய் பேசி இருந்தார்.
மேலும் தமிழ் தேசியம் நம் மண்ணோடு சார்ந்தது என்றும் அவர் கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்திருக்கும் சீமான் இது கொள்கை இல்லை… கூமுட்டை தனம் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ் தேசிய மற்றும் திராவிடம் இரண்டும் எவ்வாறாக ஒன்றாக இருக்க முடியும்? என கேள்வி எழுப்பிய சீமான் தேசிய மற்றும் திராவிடம் இரண்டும் எவ்வாறு ஒன்றாக இருக்க முடியும் என கேள்வி எழுப்பினார்.
பொதுவாக விஜய் தன்னுடைய பட விழாக்களில் குட்டி கதை சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதை நான் விமர்சிக்க இங்க குட்டி கதை சொல்ல வரல.
தம்பிக்கு வரலாற்றை கற்பிக்க வந்துள்ளேன். எங்கள் இலட்சியத்திற்கு எதிராக பெற்ற தகப்பனே வந்தாலும் அவர்கள் தங்களுக்கு எதிரி தான் .
இதில் தம்பியும் கிடையாது…. அண்ணனும் கிடையாது என தமிழ்நாட்டு கூட்டத்தில் சீமான் ஆவேசமாக பேசியிருக்கிறார் .
போன மாதம் விஜய்க்கு ஆதரவாக பேசி கூவிக் கொண்டிருந்த சீமான் தற்போது அப்படியே அந்த பல்டி அடித்தது போல் விஜய்க்கு எதிராக பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சீமானின் இந்த பேச்சு அரசியல் களத்தில் மிகுந்த பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.