சுதா கொங்கராவிடம் இருந்து தப்பித்த சூர்யா
சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் சுதா கொங்கரா “புறநானூறு” என்ற தலைப்பில் ஒரு திரைப்படத்தை தொடங்கியிருந்தார். அத்திரைப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சில நாட்களுக்குப் பிறகு சூர்யா அத்திரைப்படத்தில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளிவந்தது.

சூர்யா வெளியேறியதற்கு ஒரு காரணமும் கூறப்பட்டது. அதாவது 1965 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த ஹிந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டத்தை மையப்படுத்தி சுதா கொங்கரா இயக்கும் திரைப்படம் உருவாக இருந்ததாம். சூர்யா பாலிவுட்டில் சில திரைப்படங்களில் நடிப்பதாக இருந்ததாம். ஒரு வேளை “புறநானூறு” திரைப்படத்தில் நடித்தால் தனது பாலிவுட் சினிமா கனவுக்கு பங்கம் ஏற்படும் என்ற காரணத்தால் சூர்யா “புறநானூறு” திரைப்படத்தில் இருந்து விலகியதாக கூறப்பட்டது. சூர்யா இத்திரைப்படத்தில் இருந்து விலகியதை தொடர்ந்து இதே கதையில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
அங்கிருந்து தப்பித்து இங்கே மாட்டிய சூர்யா?
சூர்யா தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் “வாடிவாசல்” திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படம் “வாடிவாசல்” என்ற நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட உள்ளது. இந்த “வாடிவாசல்” கதை ஜல்லிக்கட்டு விளையாட்டை அடிப்படையாக வைத்து உருவான கதையாக இருந்தாலும் இந்த கதையிலும் ஹிந்தி திணிப்பை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம் குறித்த சில காட்சிகள் இடம்பெறுகிறதாம்.

எந்த சம்பவத்தின் காரணமாக சூர்யா சுதா கொங்கரா திரைப்படத்தில் இருந்து விலகினாரோ அதே சம்பவம் வெற்றிமாறன் திரைப்படத்தில் இடம்பெற இருக்கிறதாம். இதற்கு சூர்யாவின் ரியாக்சன் என்னவாக இருக்கும்? என விமர்சகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளதாம்.