மூத்த நடிகர்
நடிக்க வந்த புதிதில் சத்யராஜ் வில்லன் கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்தார். அதனை தொடர்ந்து ஹீரோவாக நடிக்க தொடங்கிய சத்யராஜ், தமிழின் முன்னணி நடிகராக ஆகிப்போனார். சமீப காலமாக தமிழ் மட்டுமல்லாது வேற்று மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். குறிப்பாக “பாகுபலி” திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்திருந்த கட்டப்பா கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. சமீபத்தில் ஹிந்தியில் “மூஞ்சா” என்ற திரைப்படத்திலும் சத்யராஜ் நடித்திருந்தார்.

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம்!
இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் பாலிவுட்டில் சல்மான் கானை வைத்து இயக்கி வரும் “சிக்கந்தர்” திரைப்படத்தில் சத்யராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கூடுதலாக தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கும் “ஹரி ஹர வீரமல்லு” என்ற திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம். தமிழில் முன்னணி கதாநாயகர்கள் வாங்கும் சம்பளத்திற்கு இணையாக சத்யராஜ் தற்போது சம்பளம் வாங்குவருவதாக கூறப்படுகிறது.