ஜீரோ ஹேட்டர் கலைஞன்
இயக்குனரும் நடிகருமான சசிகுமாருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல அபிப்ராயமும் வரவேற்பும் இருக்கிறது. இதற்கு முழுமுதல் காரணம் அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்களே. கடந்த 2023 ஆம் ஆண்டு சசிகுமார் நடித்த “அயோத்தி” திரைப்படம் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தது. மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் மதநல்லிணக்கத்தை ஊக்கப்படுத்துவது போலவும் அமைந்திருந்த இத்திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது.

சசிகுமார் மிகச்சிறந்த நடிகர் என்றபோதிலும் “சுப்ரமணியபுரம்”, “ஈசன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து இவர் வேறு எந்த திரைப்படத்தையும் இயக்கவில்லை. ஆதலால் ரசிகர்கள் மத்தியில் இயக்குனர் சசிகுமாரை திரையில் காணவேண்டும் என்ற ஆவல் உள்ளது.
சசிகுமார் கைக்கு வந்த நாவல்..
இந்த நிலையில் சசிகுமார், “குற்றப்பரம்பரை” நாவலை வெப் சீரீஸாக இயக்க உள்ளார். இந்த நாவலை படமாக இயக்க பாலாவுக்கும் பாரதிராஜாவுக்கும் இடையே சில மனஸ்தாபங்கள் கூட ஏற்பட்டது. அந்த வகையில் இந்த நாவலை சசிகுமார் வெப் சீரீஸாக இயக்கவுள்ளார்.

இந்த வெப் சீரீஸில், சண்முக பாண்டியன், சத்யராஜ், ராணா உள்ளிட்ட பலரும் நடிக்க உள்ளனராம். இதனை நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்திற்காக உருவாக்கவுள்ளாராம் சசிகுமார். இந்த வெப் சீரீஸிற்கான படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.