Cult திரைப்படம்
2008 ஆம் ஆண்டு சசிகுமார் இயக்கத்தில் ஜெய், சசிகுமார், சமுத்திரக்கனி, சுவாதி உள்ளிட்ட பலரது நடிப்பில் மிகவும் வித்தியாசமான ஆக்சன் டிராமாவாக வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் “சுப்ரமணியபுரம்”. 1980களில் நடப்பது போன்ற கதையம்சத்துடன் இத்திரைப்படம் உருவாகியிருந்தது. இத்திரைப்படத்தை சசிகுமாரே தயாரித்திருந்தார்.

தியேட்டரே கிடைக்கலை…
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட சசிகுமார், “சுப்ரமணியபுரம்” திரைப்படம் வெளியாகும்போது நேர்ந்த பல சம்பவங்களை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.
“சுப்ரமணியபுரம் திரைப்படத்திற்கு சென்னையில் திரையரங்கமே கிடைக்கவில்லை. சத்யம் திரையரங்கில் இரண்டாவது வாரம்தான் திரையிட்டார்கள். சங்கம் தியேட்டரில் மட்டுந்தான் காலை முதல் ஷோ போடப்பட்டது. மதியம் மினி உதயம் திரையரங்கிற்கு சென்று படம் பார்த்தோம். அங்கே திரையரங்கில் கைத்தட்டல்கள் பறந்தன. அதன் பின் இரண்டாவது நாளான சனிக்கிழமையில் திரையிடல்கள் அதிகரிக்கப்பட்டது. வரவேற்பும் அதிகமாக இருந்தது.

ஞாயிற்றுக்கிழமை மதுரைக்கு சென்று படம் பார்த்தோம். நல்ல வரவேற்பு கிடைத்தது. என்னையும் சமுத்திரக்கனியையும் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். அதன் பின் படம் 100 நாட்கள் ஓடியது” என்று அப்பேட்டியில் சசிகுமார் பகிர்ந்துகொண்டுள்ளார்.