தமிழ் சினிமாவும் சென்டிமென்ட்டும்
எந்தெந்த துறைகளில் பணம் அதிகப்படியாக புரள்கிறதோ அந்தந்த துறைகளில் நல்ல நேரம், சகுணம், சென்டிமென்ட் பார்ப்பது போன்ற நம்பிக்கைகளை தவிர்க்க முடியாது. சினிமாவும் அதற்கு விதிவிலக்கல்ல. அந்த வகையில் இந்த சென்டிமெட்டிற்கு கார்த்தி படக்குழுவும் தப்பவில்லை.
மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம்
கார்த்தி நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் “சர்தார்”. Spy Thriller வகையைச் சேர்ந்த இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.

சென்டிமென்ட் பார்க்கும் படக்குழு
அந்த வகையில் இத்திரைப்படத்தை 2025 ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு செய்து அதன்படி பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிடுவதற்கு பின்னால் ஒரு சென்டிமென்ட் இருக்கிறதாம். அதாவது 2022 ஆம் ஆண்டு தீபாவளிக்குதான் “சர்தார்” திரைப்படத்தின் முதல் பாகம் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அந்த சென்டிமென்ட்டை கணக்கில் கொண்டுதான் “சர்தார் 2” திரைப்படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாம்.