SMS
ஜீவா, சந்தானம், அனுயா உள்ளிட்ட பலரது நடிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் “சிவா மனசுல சக்தி”. இத்திரைப்படத்தை எம்.ராஜேஷ் இயக்கியிருந்தார். விகடன் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற சந்தானத்தின் நகைச்சுவை காட்சிகள் இப்போதும் வயிறு குலுங்க சிரிக்க வைப்பவை.

குறிப்பாக ஜீவாவிற்கும் அனுயாவிற்கும் சண்டை வரும்போது அனுயா அந்த இடத்தை விட்டு போய்விட, ஜீவா நடு ரோட்டில் நின்றுகொண்டு கத்திக்கொண்டிருப்பார். அப்போது சந்தானம் சட்டை போடாமல் தனது உடம்பை பாயால் சுருட்டியடி வந்து “அவள் போய் 6 மாசம் ஆச்சு” என கூறும் நகைச்சுவை காட்சி ரசிகர்கள் சிரிப்பலையில் ஆழ்த்தியது.
வெறுப்போடு பேசிய வசனம்…

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ஜீவா, இக்காட்சியை குறித்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொண்டார். அதாவது இந்த காட்சியை படமாக்கும்போது “ஏன்டா இப்படி Night Shooting வச்சி சாவடிக்கிறீங்க” என படக்குழுவினரின் மேல் வெறுப்பாக இருந்தாராம். அந்த வெறுப்பில் பேசிய வசனம்தான் “அவள் போய் 6 மாசம் ஆச்சு” என்ற வசனம் என்று அப்பேட்டியில் ஜீவா பகிர்ந்துகொண்டுள்ளார்.