எதிர்பாராத வெற்றி
12 வருடங்களாக கிடப்பில் கிடந்த “மதகஜராஜா” திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தன்று வெளிவந்த நிலையில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. சுந்தர் சி இயக்கிய இத்திரைப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். குறிப்பாக சந்தானம் காமெடியனாக நடித்துள்ளார். சந்தானத்தின் காமெடி காட்சிகள் பலவும் ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்தியது.

கண்டிஷன் போடும் சந்தானம்…
சமீப காலமாகவே சந்தானம் எந்த திரைப்படத்திலும் காமெடியனாக நடிக்கவில்லை. ஹீரோவாகவே நடித்து வருகிறார். இந்த நிலையில் சுந்தர் சி விஷாலை வைத்து “ஆம்பள 2” திரைப்படத்தை இயக்க உள்ளாராம். இத்திரைப்படத்தில் சந்தானத்தை காமெடியனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறதாம். “ஆம்பள 2” திரைப்படத்தில் காமெடியனாக நடிக்க சந்தானம் ரூ.10 கோடி சம்பளமாக கேட்டுள்ளாராம். ஆதலால் சம்பளத்தை குறைப்பதற்கான பேச்சு வார்த்தை தீவிரமடைந்துள்ளதாம்.