நடிச்சா ஹீரோவாதான்…
தமிழ் சினிமா உலகில் மிகச் சிறந்த நகைச்சுவை நாயகனாக வலம் வந்த சந்தானம் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய பிறகு அவர் காமெடியனாக எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. எனினும் 12 வருடங்கள் கழித்து வெளிவந்த “மதகஜராஜா” திரைப்படத்தில் சந்தானம் காமெடியனாக கலக்கிய காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரித்த வைத்தது.

மீண்டும் காமெடியனாக சந்தானம்…
இந்த நிலையில் சந்தானம் மீண்டும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளிவருகிறது. அதாவது ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தில் சந்தானத்தை காமெடியனாக நடிக்க வைப்பதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம். ஒப்புக்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.