1000 கோடி
அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 5 ஆம் தேதி வெளியான “புஷ்பா 2” திரைப்படம் மாபெறும் வெற்றி பெற்ற நிலையில் உலகளவில் ரூ.1000 கோடியை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. குறிப்பாக அல்லு அர்ஜூன் இடம்பெற்ற ஆக்சன் காட்சிகள் ரசிக்கும்படியாக இருந்தது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “Peelings” பாடலை குறித்து ஒரு அரிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

சங்கப்பாடல்
“புஷ்பா 2” திரைப்படத்தில் இடம்பெற்ற “Peelings” பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலான பாடலாக வலம் வருகிறது. இதில் அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகாவின் நடனம் ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளது என்றே கூறலாம். இந்த நிலையில் இப்பாடலின் துவக்கத்தில் இடம்பெற்ற “மல்லிகை பாணத்தே அம்புகளோ” என்று தொடங்கும் வரிகளை குறித்த ஒரு ஆச்சரிய தகவல் வெளிவந்துள்ளது.
ரசிகர்கள் அனைவரும் அந்த வரிகள் மலையாள வரிகள் என்றே நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அந்த வரிகள் தமிழ் சங்க இலக்கிய பாடலான “நெடுநல்வாடை” பாடலில் இடம்பெற்ற வரிகள் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இத்திரைப்படத்தில் அந்த வரிகள் மலையாள மொழியைச் சேர்ந்த வரிகள் என்று காட்டப்பட்டுள்ளது.