சமூக பொறுப்புள்ள இயக்குனர்…
இயக்குனர் சமுத்திரக்கனி தமிழ் சினிமாவின் சமூக பொறுப்புள்ள இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கிய பல திரைப்படங்கள் சமூகத்தில் நடக்கும் அநீதியை தட்டிக்கேட்கும் வகையில் அமைந்திருக்கும். அது மட்டுமல்லாது ஒரு மிகச் சிறந்த நடிகராகவும் தற்போது சமுத்திரக்கனி வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாக்களிலும் சமுத்திரக்கனி கலக்கி வருகிறார். தற்போது திரு.மாணிக்கம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள சமுத்திரக்கனி சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டபோது அவர் சமூக வலைத்தளங்களை குறித்து கூறியது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நிர்வாண கிடங்கு…
“இன்னும் ஒரு 5 ஆண்டுகளில் சமூக வலைத்தளங்கள் ஒரு நிர்வாண கிடங்காக மாறிவிடும். அதை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறது. ஏனென்றால், அதன் மூலமாக வருமானம் வருகிறது. ஒரு சில பெண்களெல்லாம் தனக்கு நடிப்பதில் ஆர்வமில்லை, இதில் இருந்தே நிறைய பணம் வருகிறது என வெளிப்படையாகவே கூறுகிறார்கள்” என தனது ஆதங்கத்தை அப்பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார் சமுத்திரக்கனி.

மேலும் பேசிய அவர், “டிஜிட்டல் ஃபாஸ்டிங் என்பது போல் இனி நான் மொபைலை பார்க்க மாட்டேன், மொபைலில் பேச மாட்டேன் என்று இருந்தால்தான் இனி நல்லது” என அவர் அப்பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.