மிமிக்ரி கலைஞர்
தமிழகத்தில் மிகப் பிரபலமான மிமிக்ரி கலைஞராக வலம் வந்தவர் படவா கோபி. இவர் தமிழில் நடித்த முதல் திரைப்படம் கே.பாலச்சந்தரின் “பொய்”. இத்திரைப்படம் சரியாக போகவில்லை. ஆதலால் இவர் மேலும் நடிப்பதற்கான வாய்ப்பு சரியாக அமையவில்லை.

சமுத்திரக்கனி சொன்ன வார்த்தை…
இந்த நிலையில்தான் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் படவா கோபியையும் சமுத்திரக்கனியையும் சிறப்பு விருந்தினர்களாக அழைத்தார்களாம். அப்போது மேடையிலேயே வைத்து சமுத்திரக்கனியிடம் வாய்ப்பு கேட்டாராம் படவா கோபி. அதற்கு சமுத்திரக்கனி, “கண்டிப்பா நான் என் படத்துல உங்களை நடிக்க வைக்கிறேன். நீங்க வாய்ப்பு கேட்காதீங்க. நீங்க பெரிய கலைஞன்” என்று கூறினாராம்.
திடீரென வந்த வாய்ப்பு

அதன் பின் 4 மாதங்கள் கழித்து படவா கோபிக்கு சமுத்திரக்கனியிடம் இருந்து அழைப்பு வந்ததாம். அவ்வாறு அவருக்கு கிடைத்த திரைப்படம்தான் “போராளி”. இத்திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்திருந்த காட்சிகள் அனைத்திற்கும் திரையரங்குகளில் கைத்தட்டல் பலமாக இருந்ததாம். இந்த கைத்தட்டலை தனது மனைவியுடன் பார்த்து ரசித்ததாக ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார் படவா கோபி.