சமந்தாவின் விவாகரத்து:
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இவர்களது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது .

இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். சிறந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தார். இதனிடையே மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்ட அவர் தீவிரமான சிகிச்சை எடுத்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
முன்னாள் கணவர் குறித்து சமந்தா:
கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த சிட்டாடல் ஹனி பன்னி என்ற வெப் சீரியலில் நடித்தார். அது பெரும் விமர்சனத்திற்கு இடையே வெளியாகியது. இதில் சமந்தா எல்லை மீறிய படுக்கையறை காட்சிகளில் நடித்ததாக செய்திகள் வெளியானது .
இதனிடையே சமந்தாவின் முன்னால் கணவர் நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாவது திருமணம் செய்ய இருக்கிறார். இந்த திருமணம் வருகிற டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த இந்நிலையில் சமந்தா தன்னுடைய முன்னாள் கணவர் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருப்பதாவது,

எனக்கு விவாகரத்து ஆன சமயத்தில் பலரும் என்னை செகண்ட் ஹேண்ட். வாழ்க்கை வீணா போயிட்டது. சமந்தாவை யூஸ் பண்ணிட்டாங்க என்றெல்லாம் கமெண்ட் செய்தார்கள். அப்போது அதெல்லாம் எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. இந்த பிரச்சனை என்பது எனக்கு மட்டும் இன்றி என்னோட குடும்பத்திற்கும் கஷ்டமாதான் இருந்துச்சு. அந்த சமயத்தில் நான் கொஞ்சம் ரொம்ப டவுன் ஆகிட்டேன்.
பழிவாங்குகிறாரா சமந்தா?
அதுக்காக என்ன பண்ண முடியும்? ஒரு மூளையில் அமர்ந்து அழுதுக் கொண்டே இருக்கவா முடியும்? சரி நடந்தது நடந்தாயிற்று….வாழ்க்கையில் அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்று முடிவெடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

அதையும் நான் பழிவாங்குவதற்காக தான் இப்படி வாழ்ந்து வருகிறேன் என சிலர் நினைக்கிறார்கள் சொல்கிறார்கள். ஆனால், அது அர்த்தமில்லை. நான் எனது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
இவ்வளவு பிரச்சனைக்கு பிறகும் என்னுடன் நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என சமந்தா மிகவும் நல்லதனமாக பேசி இருக்கிறார். இதை கேட்ட சமந்தாவின் ரசிகர்கள் உங்கள் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாவே நடக்கும் விட்டுவிடுங்கள் என கூறி அவரை தேற்றி வருகிறார்கள்.